பேரிழப்பிற்கான உதவி
மனிதனாலோ அல்லது இயற்கையாலோ ஏற்பட்ட பேரிழப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மனம், உணர்வு, பொருள் தேவைக்காக ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் பொருளுதவி, மனவேதனைக்கான உதவி, மற்றும் நீண்ட கால சீரமைப்புத்திட்டம் ஆகிய மூன்று நிலைகளில் தலையிடும் நிகழ்ச்சி ஒன்றை வடிவமைத்தார்.
உடனடி பொருளுதவியும், சேவையும்: பெருந்துன்பத்தின் பின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட்டவர்களுக்கு உணவு, உடை, மருந்துகள் மற்றும் தங்கும் இடம் அமைத்துக் கொடுத்தல்.
குறுகிய கால மனவேதனைக்கான உதவி: உணர்வாலும், மனவேதனையாலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளும், ஆலோசளைகளும்
நீண்டக்கால மறுசீரமைப்புத் திட்டம்: வீடுகள்,சுகாதார அமைப்புகள்,பாதைகள். பள்ளிகள், தொழிற்பயிற்சிக்கூடங்கள் கட்டுதல்
2002 ல் குஜராத்தில் நடந்த இந்து-முஸ்லீம் இனக் கலவரத்தினால் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150000 க்கும் மேற்பட்டோர் இடம் பெயர செய்யப்பட்டார்கள்.
தனியாகப் பிரிந்த இனங்களிடையே நம்பிக்கையை உருவாக்குதல்...
இந்த சூழ்நிலையில், அகதிகள் முகாம்களில் வாழும் கலை அமைப்பானது மனவேதனை நிவாரண பயிலரங்குகளை தொடங்கியது. தொண்டர்கள் ஏற்பாடு செய்த அமைதிக் கூட்டத்தில் இரண்டு மதங்களை சேர்ந்த இனத் தலைவர்களும், குடியிருப்போரும் கலந்துக் கொண்டனர். கலவரங்களுக்குப்பின்,ஸ்ரீ ஸ்ரீ குஜராத் சென்றபோது, இந்து,முஸ்லீம் இரண்டு தலைவர்களாலும் வரவேற்கப்பட்டார். கூட்டு விவாதம், பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் இயல்புநிலைக்கும், ஒற்றுமையாக இருக்கவும் வேலை செய்ய பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
)குஜராத் பூகம்பம் -உயிர் காப்பது
ஜனவரி 26 ,2001 ல் ரிச்ட்டர் ஸ்கேலில் 8.1 அளவிற்கு ஏற்பட்ட பூகம்பத்தினால், 20000 பேருக்கும் மேல் கொல்லப்பட்டனர். 10 லட்சத்துக்கும் மேலானோர் வீடிழந்தனர். இந்த பேரிடருக்குப்பின், சில மணி நேரங்களுக்குள் வாழும் கலை அமைப்பானது, ஸ்ரீ ஸ்ரீ யின் வழிகாட்டின்படி, நிவாரண முயற்சிகளை தொடங்கியது.
நானா தஹிசராவில், வாழும் கலை அமைப்பு 24 வீடுகள், ஒரு பலநோக்கு சமூக மையம், தொடக்கநிலை முதன்மையான உடல்நல மையம், ஒரு கிராம அரசாங்க மையம், ஒரு தொடக்கப் பள்ளி, ஒரு தொழும் இடம், ஒரு நீர்த்தொட்டி, ஒரு நீர் வழ ங்கும் அமைப்பு, ஒரு வடிகால் அமைப்பு இவற்றை கட்டியது. ஒரு உயர்நிலைப்பள்ளி, பல படுக்கைகள் கொண்ட ஒரு அறை, 15 தற்காலிக பள்ளிகள் முதலியவற்றையும் அடுத்துள்ள பகுதிகளுக்காக கட்டினர்.
இந்த அமைப்பின் அவசரகால உதவியினாலும், மன வேதனை நிவாரண முகாம்களினாலும் குழந்தைகள் உட்பட 100000 க்கும் மேற்பட்டோர் 120 கிராமங்களில் பயனடைந்தனர்.
சூரத், குஜராத்,இந்தியா:
ஆகஸ்ட்,2006 ல் சூரத்,குஜராத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். வாழும் கலையின் 1500 தொண்டர்கள், உணவும், அவசரகால உதவியும் அளித்தனர். இலவச மருத்துவ முகாம்களின் மூலம் 11000 க்கும் மேற்பட்டோருக்கு உதவி செய்தனர். இந்தத் தொண்டர்கள் உள்ளூர் அரசாங்க அலுவலர்கள், படை வீரர்கள், மற்ற அரசாங்கத்தை சாராத அமைப்புகள், சேவை அமைப்புகள் இவற்றுடன் கலந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கும், வெகு தொலைவிலுள்ள பகுதிகளில் இருக்கும் மக்களுக்கும் உதவி செய்தனர்.