"வாழும் கலை" பயிற்சி
"வாழும் கலை" பயிற்சி, பங்குகொள்வோருக்கு அவர்களுள்ளே மறைந்துள்ள ஆழ்ந்த சக்தியை திறக்கும் நிதர்சனமான அறிவையும், தொழில் நுட்பத்தையும் அளித்து அவர்களது வாழ்கையை முழுமையாக்குகிறது பங்குகொள்வோர் - அவர்கள் மகிழ்ச்சியாகவும், வெற்றிபெற்றவராகவும் இருந்தாலும் அல்லது வாழ்கையில் ஏமாற்றம், பயம், ஆரோக்யம குறைவு முதலானவைகளால் மன அழுத்தம் உடையவராக இருந்தாலும் - , அனைவரையும் தனிததனியே கவனிப்பதால், எல்லோரும் மனம், உடல் அழுத்தங்களை குறைக்கும் தொழில் நுட்பங்களை கற்று உடல், சக்தி, மனஅமைதி, சுயஅறிவு, பட்டறிவு, மகிழ்ச்சி ஆகியவற்றில் உயர்ந்த நிலை பெற்று வெளி வருகிறார்கள்.
தினசரி வாழ்கைக்கான சுலபமான வழிமுறைகள்
இந்த பயிற்சியின் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் என்னவென்றால் பங்கு பெறுவோர் எல்லாரும் இதை ஒரு வகுப்பாக கருதாமல் நேரடி அனுபவமாக நிகிழ்கின்ற தருணத்தை திரும்பவும் கண்டுபிடித்து மகிழ முடிகின்றது. தினந்தோறும் செய்யக்கூடிய எளிதான ஆனால் சக்திமிக்க வழிமுறைகளுடன் அனைவரும் பயிற்சி முடிவில் வெளி வருகிறார்கள். சர்வ கலாசாலை, கிறிஸ்தவர் கோயில், அரசாங்கம், வியாபாரம், சிறை சாலை, போர்முனை ஆகியவற்றில் ஈடுபடும் எல்லாரும் ஜாதி, மத பாகுபாடு இன்றி வாழும் கலை பயிற்சியால் மகிழ்ச்சியில் திளைக்க முடிகின்றது.
முக்கிய அம்சம்கள்
- சுதர்ஷன் கிரியா
- உடல், மனம், அறிவு அனைத்தையும் ஒருங்கிணைத்து அமைதிபடுத்தும் நெறிமுறைகள்.
- எதிர் மாறான உணர்வுகளை, நிகழ்வுகளை எதிர்நோக்கும் திறமைகள்.
- வேலை மற்றும் உறவுமுறைகளை மேம்படுத்தும் உலக பாண்டித்தியம்.
- அறிவு, உணர்வுகளை சார்ந்த ஒழுங்கு முறைகளின் உள் ஆய்வு.
- ஆரோக்கியம், ரத்த ஓட்டம், உடல் உபாதைகளை நெறி படுத்தும் யோகாசன பயிற்சிகள்.